Monday, December 1, 2008

Flash News : கலைஞர் குடும்பத்தில் சமரசம்?

சமீபகாலமாக அழகிரி தரப்புக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடைவெளி இருந்து வந்தது. இந்த மனக்கசப்பின் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஒன்றரை வருடமாக பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.



இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்ற அளவுக்கு பிரச்சினை வலுத்ததும், கலைஞர் முரசொலி இதழில் மாறன் சகோதரர்கள் பற்றி கூறியதும், அதற்கு மாறன் சகோதரர்கள் பதில் அறிக்கை விடுத்திருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.



இந்நிலையில் கலைஞர் மகள் செல்வி வீட்டில் அழகரி மகள் கயல்விழி இருதரப்புக்கும் இடையே சமரச முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மு.க.ஸ்டாலின், அழகிரி, கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.



இதில் இதுநாள் வரை இருந்த மனக்கசப்புகளை மறந்து இனி ஒற்றுமையாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.



இன்று மாலை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில், அழகிரி, மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியான செய்திகளை வழங்குவார்கள் என திமுகவின் முக்கிய புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.


Thanks
Nakkheeran [Source]