Monday, November 24, 2008

Nenjukkul Peidhidum - Vaaranam Aayiram

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று* மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை,
பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…
இனி நீ தான் எந்தன் அந்தாதி… (நெஞ்சுக்குள்)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா… புன்னகையோ போகன்வில்லா**…
நீ நின்ற இடம் என்றால், விலை ஏறி போகாதோ?
நீ செல்லும் வழியெல்லாம், பனி கட்டி ஆகதோ?
என்னோடு வா.., வீடு வரைக்கும்
என் வீட்டை பார்…, என்னை பிடிக்கும் !

இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே,
இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே [போகாதே... ]

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சற்றென்று மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை…

தூக்கங்களை தூக்கி சென்றாய் [ தூக்கி சென்றாய் ]
ஏக்கங்களை தூவி சென்றாய்,
உன்னை தாண்டி போகும் போது [ போகும் போது ]
வீசும் காற்றின் வீச்சு வேறு !
நில்லென்று நீ சொன்னால் என் காலும் நகராதே..
நீ சுடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே..
காதல் என்னை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை !

என் ஜீவன் ஜீவன் நீதானே…
எனத்தோன்றும் நேரம் இது தானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சற்றென்று மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை,
பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…
இனி நீ தான் எந்தன் அந்தாதி..


நீ நின்ற இடம் என்றால், விலை ஏறி போகாதோ?
நீ செல்லும் வழியெல்லாம், பனி கட்டி ஆகதோ?
என்னோடு வா.., வீடு வரைக்கும்
என் வீட்டை பார்…, என்னை பிடிக்கும் !

இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே,
இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே [போகாதே... ]

3 comments:

Anonymous said...

i Like this song very much..........

Twilight Sense said...

nice song pers

Anonymous said...

don't post the pallavi or charana again and again